அருகிவரும் நிலையில் உள்ள சருகுபுலியொன்று விபத்திற்குள்ளாகிய நிலையில் உயிரிழப்பு.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் இருதயபுரம் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோதிய வாகனம் தப்பிச்சென்றுள்ள நிலையில் குறித்த சருகுபுலி உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சருகு புலியானது சதுப்பு நிலப்பகுதியில் அதிகளவில் வாழ்ந்துவரும் நிலையில் அண்மைக்காலமாக குறித்த இனம் அருகிவரும் நிலையில் இவ்வாறான விபத்துகளில் இறக்கும் நிலையும் காணப்படுகின்றது.