திடீரென வெடித்து சிதறிய பஸ்! இருவர் மரணம் பலரின் நிலைமை கவலைக்கிடம்.

ரஷ்யாவின் தென்மேற்கு நகரமான வோரோனேஜில் பகுதியில் பஸ் ஒன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெடி விபத்தின் போது பஸ்ஸில் 30 க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளதுடன், வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நியைில் உயிரிழந்துள்ளார்.
மேலும்,காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெரும் குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வுக்குழுவின் வோரோனேஜ் கிளை, பஸ்ஸை பராமரிப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவே விபத்திற்கான காரணம் எனக் கூறியுள்ளது.