விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் Zoom செயலி ஊடாக இடம்பெற்றுள்ளது!
முல்லைத்தீவு மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நே Zoom செயலி ஊடக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற விவசாயத் துறை சார் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது 2021, 2022 பெரும்போகம் மற்றும் 2022 சிறுபோக செய்கையின் உற்பத்தித் திட்டம் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற சேதனப்பசளை உற்பத்தி மற்றும் நீர்ப்பாசன செழுமை(வாரிசௌபாக்கியா) திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
விவசாய அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், பதில் பிரதி விவசாயப் பணிப்பாளரின் பிரதிநிதி, விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.