ஜோரூட். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.

டெஸ்டில் அதிக ரன்: கிரகாம் கூச்சை முந்தி ஜோரூட் 2-வது இடம்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜோரூட் முதல் இன்னிங்சில் 64 ரன்னும், 2-வது இன்னிங்சில் 109 ரன்னும் எடுத்தார்.
தற்போது லார்ட்சில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 48 ரன் எடுத்துள்ளார்.
ஜோரூட் 13-வது ரன்னை தொட்டபோது டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். அவர் கிரகாம் கூச்சை முந்தினார்.
30 வயதான ஜோரூட் 107 டெஸ்டில் 196 இன்னிங்சில் விளையாடி 8935 ரன் எடுத்துள்ளார். சராசரி 49.36 ஆகும். 21 சதமும், 51 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 254 ரன் குவித்துள்ளார்.
கிரகாம் கூச் 118 டெஸ்டில் 8900 ரன் எடுத்துள்ளார். சராசரி 42.58 ஆகும். 20 சதமும், 46 அரைசதமும் அடித்துள்ளார். தனது சிறப்பான ஆட்டம் மூலம் அவரை முந்தி ஜோரூட் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
அலஸ்டர் குக் 161 டெஸ்டில் 12,472 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவரது சராசரியை விட ஜோரூட் அதிக சராசரி வைத்துள்ளார். குக்கின் சராசரி 45.35 ஆகும். ஜோரூட் முதலில் 10 ஆயிரம் ரன்னை கடந்து, அதன்பிறகு குக்கின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார்.