ஹெய்டியில் 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்.
கரீபியன் தீவிலுள்ள ஹெய்டியில் 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இது கரீபியன் தீவுகள் முழுக்க உணரப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும் பலர் பலியாகியிருக்கலாம் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.