மகளுக்கு முன்பாக உயிரிழந்த தாய் – கணவனை பிடித்தவாறு உயிரைவிட்ட மனைவி – ஈக்களை போல் உயிரிழக்கும் மக்கள்
அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனையில் கொரோனா விடுதியில் சலிக்காது பணியாற்றும் மருத்துவர் நஜித் இந்திக என்பவர் கொரோனா தொற்றாளர்கள் அதனால் ஏற்படும் மரணங்களை வலி நிறைந்த வேதனையுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனை தொடங்கப்பட்ட நாளிலிருந்து நான் கொரோனா விடுதியில் பணியாற்றி வருகிறேன். நாம் 12 மருத்துவர்கள் கொரோனா விடுதிகளில் வேலை செய்கிறோம். இப்போது அவை நிரம்பி விட்டன. தினமும் 100 கொவிட் நோயாளர்கள் கதிரைகள் மற்றும் தரையில் சிகிச்சை பெறுகின்றனர்.
வேலை தொடர்பான மன அழுத்தம் பற்றி நான் கேள்விப்பட்டு படித்திருந்தாலும் அது உண்மையில் என்னவென்று இப்போதுதான் உணர்கிறேன். இதுவரை வந்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை, அவர்கள் சிரமப்படும் விதம், ஒட்சிசன் கொடுக்கப்பட வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை, சிரமப்படும் நோயாளிகளின் வயது…இவை அனைத்தும் ஒரே வாரத்தில் மாறின.
அது ஒரு பெரிய வித்தியாசம். விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் எண்ணிக்கை 3 மடங்கிலும் அதிகம்.
எழுபது, எண்பதுகளின் பெற்றோர்கள் முன்பு கொஞ்சம் கடினமாக இருந்தனர், இப்போது அது முப்பது மற்றும் நாற்பது வயதுடையவர் களுக்கு கடினமாக உள்ளது. இன்னும் இன்னும் ஒட்சிசன் விநியோக இயந்திரங்கள் உச்சபட்ச நிலையில் இயங்கினாலும் கூட மக்கள் இறப்பதற்காக காத்திருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாற்பது வயதுள்ள ஒரு தாய் தனது மகளுக்கு முன்பாக மூச்சுத்திணறலால் இறந்தார், CPAP இயந்திரம் பொருத்தப்பட்டு பேச முடியாத ஒரு மனைவி தன் கணவனைப் பிடித்தவாறு விடைபெற்றார். தனது மனைவி இரட்டைக்குழந்தையைப் பிரசவிக்க தயாராகிக் கொண்டிருந்த போது அவரது 27 வயது கணவன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
இவை அனைத்தும் ஒரே நாளில் நடக்கும் போது நான் உணரும் கனம், கடினத் தன்மை, பிரச்சினை, அதிக வேலை….இந்தச் சுமை என் தலையில் உணரப்பட்டது. அனைத்திலும் கடினமான பகுதி மக்கள் இறக்கும் போது, அவர்கள் கடினமாக மூச்சுவிடும் போது “எம்மை நாம் காப்பாற்ற ஏதாவது செய்யப் போகிறோமா?”என்பதே.
முன்பு ஓரிரு நாட்களில் இறப்புகள் தற்போது ஒரு வாரத்தில் ஒரு நாளில் 4, 5ஆக மாறியுள்ளன. இந்த வீதத்தில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஒட்சிசன் சிலிண்டர் இல்லாததால் மக்கள் கதிரைகளிலும், தரையிலும் முற்றத்திலும் இறந்து விடுவார்கள். முடிந்தவரை கவனமாக இருங்கள்… மக்கள் ஈக்களைப் போல் இறக்கிறார்கள். கடந்த மாதம் 12 மருத்துவர்களில் ஒருவரும் 30 தாதிகளில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.