கிளிநொச்சியில் மேலும் 43 பேருக்குக் கொரோனா!

கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு 196 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.