கொக்குவிலைச் சேர்ந்தவர் கொரோனாவால் மரணம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177ஆக உயர்வடைந்துள்ளது.