பண்டாரகமையில் 100 பேருக்குக் கொரோனா!

பண்டாரகம பொதுச் சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று 252 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 100 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொதுச் சுகாதாரப் பிரிவுக்கு உட்பட்டவர்களே அன்டிஜன் பரிசோதனைக்கு வந்திருந்தனர் எனவும், இவர்களில் 100 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களும் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.