செவ்வாய் அமைச்சரவை மாற்றம்; டலஸ், தினேஷ், கெஹெலிய மற்றும் ஜிஎல் ஆகியோருக்கு வேறு அமைச்சுகள்! பவித்ரா,பிரசன்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , நான்கு அமைச்சரவை இலாகாக்களை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அரசாங்கத்தின் உள் வட்டாரங்களின்படி, அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற உள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல, டல்லஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மற்றும் தினேஷ் குணவர்தன வேறு அமைச்சுகளுக்கு மாற்றப்படுவார்கள்.
தற்போது வெளிவிவகார அமைச்சராக இருக்கும் தினேஷ் குணவர்தனவுக்கு, கல்வி அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும், தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு , ஊடகத்துறை அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராகவும், கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்க உள்ளதாக அரசாங்கத்தின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், கல்வி அமைச்சரும் கடந்த காலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
தற்போதைய கோவிட் விரிவாக்கத்தை எதிர்கொண்டு, கல்வி அமைச்சர் கல்வி நடவடிக்கைகளைத் தொடர சரியான முறையை உருவாக்கத் தவறிவிட்டார் மற்றும் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய ஆசிரியர்களின் பிரச்சினைகளை கல்வி அமைச்சால் தீர்க்க முடியவில்லை.
இதன் காரணமாக கல்வி அமைச்சர் மற்றும் அவரது அமைச்சகத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சரவை செய்தித் தொடர்பாளரான ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின், சில சர்ச்சைக்குரிய அறிக்கைகளால் அரசாங்கம் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுசீரமைப்பு நாளை (17) நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பிரசன்ன ரணதுங்காவின் அமைச்சகத்தில் மாற்றங்கள் இருக்கும் என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால் இவர்களது மாற்றம் குறித்து இதுவரை எந்த விபரமும் வெளியாகமையால் , அவர்களது அமைச்சுகளில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.