ரணிலூடாக , ஷவேந்திரவை தாக்குகிறாரா மஹிந்த ;அது ராஜபக்ஷ குடும்ப நலனுக்காவா?

“ரணில் பாராளுமன்றத்திற்கு வந்த நாளிலிருந்து ஏன் சவேந்திர சில்வாவைத் தாக்கி வருகிறார்?”

இது ரணிலின் பாராளுமன்றப் பயணத்தை அவதானித்து வரும் ஒருவர் எழுப்பிய கேள்வியாகும்.

“ரணிலை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்தவர் மகிந்த. ரணிலூடாக , சாவேந்திராவை தாக்க வைத்தவர் மகிந்தவாக இருக்கலாம் ”

ஐ.தே.க விலுள்ள மிக முக்கிய நபர் ஒருவரால் சொல்லப்பட்ட கதை இது.

“இந்தக் கதை உண்மையா?”

ரணில் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்பு, கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளை செய்யும் பொறுப்பை நாடாளுமன்றத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என ஊடகங்களூடாக ஒரு கருத்தை வெளியிட்டார்.

அவர் பாராளுமன்றத்திற்கு வந்த நாளில், இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் பெயரை உச்சரித்தார் மற்றும் கொரோனா நிர்வாகத்தை பிரதமர் தலைமையிலான அமைச்சரவையிடம் ஒப்படைக்குமாறு கோரினார். பின்னர் கடந்த வாரம் அவரும் நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று கொரோனா நிர்வாகத்தை அமைச்சரவையில் ஒப்படைக்குமாறு கோரினார். நேற்றுமுன்தினம், சவேந்திர சில்வாவின் பணிக்குழுவை கலைத்து, கொரோனா கட்டுப்பாட்டை அமைச்சரவைக்கு மாற்றுமாறு மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய தான் சவேந்திர சில்வாவை கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளை செய்யும் பொறுப்பை வழங்கினார்.

“அப்படியானால் ரணில் ஏன் கோட்டாவுக்கு பதிலாக ஷவேந்திராவை தாக்குகிறார்?”

உண்மையாக கோட்டாபயைத்தான் தாக்க வேண்டும். ஆனால் ராஜபக்ச குடும்பத்துக்கும், அரசாங்கத்துக்கும், கோட்டாபயவை காப்பாற்றிக் கொண்டு, சவேந்திராவை தாக்க வேண்டிய தேவை உள்ளது.  ராஜபக்ச குடும்பத்துக்கும் அரசாங்கத்துக்கும் கோட்டா , சவேந்திராவுடன் இணைந்து கொண்டு நாட்டை ஆட்சி செய்வதில் விருப்பம் இல்லை  என்றால் , அது ஆச்சரியப்படுவதற்கான ஒரு காரணமில்லை.

கொரோனாவை ஒடுக்கும் பணிக்குழு தொடங்கிய ஆரம்ப காலங்களில் , மகிந்த இந்த பணிக் குழு விவாதங்களில் பங்கேற்ற போதிலும்,  பின்னர் மஹிந்த அந்த விவாதங்களில் பங்கேற்கவில்லை. ஆனால் மகிந்தவால் இந்த பிரச்சினைகளை வெளிப்படையாக பேச முடியாது. மகிந்த தனது இளைய சகோதரரான ஜனாதிபதி கோட்டாவுடனோ அல்லது இராணுவத் தளபதி சவேந்திராவுடனோ வெளிப்படையாக மோதலொன்றை உருவாக்கிக் கொள்வார் என நினைத்தும் பார்க்க முடியாது. அதனால்தான் மகிந்த, ரணிலை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்துள்ளார். மகிந்தவால் சொல்ல முடியாதவற்றை, ரணிலூடாக ,  இப்போது கிளிப்பிள்ளை போல மகிந்த பேச வைக்கிறார்.

ரணில் பாராளுமன்றத்திற்கு வந்த நாளிலிருந்து , சவேந்திர சில்வாவை தாக்க ஆரம்பித்தார். எனினும், ரணிலது கருத்துகளுக்கு எதிராக , ரணில் மீது தாக்குதல் நடத்தவோ, சவேந்திராவை பாதுகாக்கவோ எந்தவொரு ஆளும் கட்சி எம்.பிக்களோ அல்லது அமைச்சர்களோ முன்வரவில்லை. அதாவது முழு அரசாங்கமும் சவேந்திராவைப் பற்றிய விடயத்தில் , ரணிலின் கருத்தையே கொண்டுள்ளது.

இறுதியில், சவேந்திர சில்வாவே , தனக்கு எதிரான தாக்குதலுக்கு , தானே முன்வந்து பதில் சொல்ல வேண்டியிருந்தது. முக்கிய இராணுவ தளபதிகளில் ஒருவராக இருந்த , பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மட்டுமே சவேந்திரவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

ரணில் , நாடாளுமன்றத்தில் சவேந்திரவை  தாக்குவதற்கு முன்பே , சவேந்திராவை டிலான் பெரேரா தாக்கி பேசினார்.

டிலான் பெரேரா

“எல்லா விடயத்துக்குள்ளும் இராணுவத் தளபதியை தலையை நுழைக்க் கூடாது” என்றார் டிலான். டிலான் அப்படி பேசியது தொடர்பாக ,மகிந்த அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில், இராணுவத் தளபதியைத் தாக்கும் வலிமை டிலானிடம் அந்த அளவு இல்லை.

“இராணுவத் தளபதிக்கு இது புரியாதா?”

இராணுவத் தளபதி குழந்தை அல்ல. அவருக்கு எதிரான அரசாங்கத் தலைவர்களின் எதிர்ப்பு , ரணிலூடாக வெளிப்படுவது அவருக்குப் புரியவில்லையா, ரணில் மூலம் அந்த இப்படியான எதிர்ப்புகள் , எப்படி வெளியே வருகிறது என தெரியாது என்றால் , அது ஆச்சரியமான விடயம். ஆனால் கோட்டாபய தன்னைப் பாதுகாப்பார் என சவேந்திர நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.

“இறுதியாக சரத் பொன்சேகாவுக்கு நடந்தது ஷவேந்திராவுக்கு நடக்குமா?”

ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தது கோட்டாபய அல்ல. மைத்திரிபால சிறிசேன. அவர் இராணுவத் தளபதியாக ஆனபோது, ​​போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தலைவர்களிடையே அவர் ஒரு பிரபலமான நட்சத்திரமாக இருந்தார். கோட்டாபய ஜனாதிபதியானவுடன், ஷவேந்திரா இராணுவத் தளபதி பதவியில் இருந்து நீக்குவார் என அரசாங்கத்தில் பலர் நம்பினாலும், கோட்டாபய அவரை நீக்கவில்லை.

அதற்குப் பதிலாக, கோட்டா ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே,  போர் குற்றம் சாட்டி, சவேந்திரவை அமெரிக்காவிற்குள் நுழையக் கூடாது என அமெரிக்கா தடை விதித்தது. அந்த நேரத்தில் சஜித் பிரேமதாசா எதிர்க்கட்சித் தலைவராக சவேந்திராவின் சார்பாக பேசினார். சவேந்திராவின் சார்பாக அவர் பேசிய அவர், மஹிந்தவின் ஆட்சியின் போது இராணுவத் தளபதி பதவியை , போருக்கு தைரியமாக தலைமை தாங்கிய ஷவேந்திராவுக்கு வழங்காதது நியாயமற்றது என்றும், மைத்திரிபாலவிடம் அதற்கான நீதியை வழங்குமாறு தான் கேட்டுக் கொண்டதாகவும்  தெரிவித்தார். மைத்திரியிடம் சவேந்ராவை இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு கேட்டவர்களில் தானும் ஒருவர் என்று அவர் கூறினார்.

இராணுவத் தளபதி சவேந்திர ,  பொலன்னறுவையில் மிகவும் சக்திவாய்ந்த ஐ.தே.க உறுப்பினர் ஒருவரது குடும்பத்தில் உள்ள ஒருவரையே மணந்தார். அந்தக் குடும்பம் நெல்சன் குடும்பத்தைச் சேர்ந்தது. ஐ.தே.கவின் பொன்னான யுகமான கருதப்பட்ட  ஜேஆர்-பிரேமதாச காலத்தில் நெல்சன் பொலன்னறுவை ஆட்டிப்படைத்தார்.

எச்.ஜி.பி. நெல்சன் 1956 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் மூத்த மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தாலும், ரணில் , ஐதேக தலைமையை பொறுப்பேற்ற பின்னர் ரணில் அவரை உதாசீனம் செய்தார். இதன் பிறகு நெல்சன் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.

அவருக்கு பின்னர் அரசியலுக்கு வந்த அவரது மகன் கிங்ஸ் நெல்சனைக் கூட தலையெடுக்க  ரணில் அனுமதிக்கவில்லை. அதன் விளைவாக அவர் மகிந்தவின் அரசாங்கத்தில் சேர்ந்தார். கரு உட்பட 17 பேர் மகிந்தவின் அரசாங்கத்தில் இணைந்தபோதுதான் அவர் மகிந்தவின் அரசாங்கத்தில் சேர்ந்தார். அப்போது மகிந்தவின் அரசாங்கத்தில் சக்திவாய்ந்த அமைச்சராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரியின் தலையீட்டால் கிங்ஸ் நெல்சனை மகிந்தவின் அரசாங்கத்தில் இணையவைக்க உந்துதலாக செயல்பட்டார்.

மைத்திரி 2015 ஜனாதிபதி வேட்பாளராக ஆனபோது, ​​சஜித்தின் தலையீட்டால் கிங்ஸ் நெல்சன் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். அவர் சஜித் தலைமையிலான சமகி ஜன பலவேக எனும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து  ,  2020 இல் பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சவேந்திர சில்வா , திருமணம் செய்திருப்பது நெல்சனின் சகோதரி ஒருவரையேயாகும்.

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் , கிங்ஸ் நெல்சன் அரசாங்கத்துடன் இணைவார் என  கூறி கிங்ஸ் நெல்சனை அரசாங்கத்தில் இணைத்துக்  கொள்ள மஹிந்தானந்த அளுத்கமகே முயற்சிக்கவில்லை.

இருப்பினும், கிங்ஸ் நெல்சன்,  இங்கும் இருப்பார். அங்கும்  இருப்பார் எனக்  கூறி சவேந்திர சில்வாவைத்தான்  குறிவைத்தார் எனவும் இருக்கலாம். 

சவேந்திராவை அரசாங்கம் பாதுகாக்கவில்லை என்றாலும், பொன்சேகா அவரைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் , ஒருமுறை  சவேந்திரா , பொன்சேகாவை குறிப்பிட்டு , அவரை ஒரு தந்தை போல பாதுகாப்பேன் எனக் கூறியிருந்தமையால் இருக்கலாம்.

ரணில் பாராளுமன்றத்திற்கு வந்த சூட்டோடு ,  சவேந்திராவை தாக்கி பேசியபோது, ​​ரணில் மீது தாக்குதல் நடத்தி சவேந்திரவை பாதுகாத்தவர் பொன்சேகா தான், அரசாங்கம் அல்ல.

2024 இல் மைத்திரி-சஜித்-சவேந்திர முக்கோணம் ஒன்று உருவாகுமா?

அது இன்னமும் சரியாக தெரியவில்லை. ஆனால் ரணிலும் , அரசும் ஏன் சவேந்திரவுக்கு எதிராக கத்துகிறார்கள் என்று சிந்தித்தால் , அப்படி ஏதாவது எதிர்காலத்தில் நடக்குமோ?

உபுல் ஜோசப் பெர்னாண்டோ

குருதா பகுப்பாய்வு
14-08-2021

Leave A Reply

Your email address will not be published.