யாழ்ப்பாணத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்!
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஆசாதிகா அம்ரித் மஹோத்ஸவ்’ எனும் சிறப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதையொட்டி யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாணத்துக்கான பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு ஆகியோர் பலாலியிலுள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத்தூதுவர் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து அவரது உரையும் அங்கு இடம்பெற்றது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரக கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் இந்திய கலாசார மைய கட்டடம் என்பன மூவர்ண மின் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன.