பதிவு திருமணத்தை நடத்துவதற்கு கட்டுப்பாடோடு கூடிய அனுமதி

கொரோனா  பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் அரசு ,  திருமண நிகழ்வுகள், செயலமர்வுகள் உள்ளிட்ட மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை நடத்த இன்று (16) முதல் தடை விதித்துள்ளது.

எனினும், பதிவு திருமணத்தை நடத்துவதற்கு தடை இல்லை எனவும் ,   வீட்டிலோ அல்லது வேறொரு இடத்திலோ பதிவு திருமணத்தை நடத்துவதற்கு அனுமதி உள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

பதிவு திருமணத்திற்காக திருமண தம்பதி, இரு தரப்பைச் சேர்ந்த பெற்றோர், திருமண பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சியாளர்கள் மாத்திரம் கலந்துக்கொள்ள முடியும்.

இவர்களை தவிர, வேறு எந்தவொரு தரப்பிற்கும் பதிவு திருமண நிகழ்வில் கலந்துக்கொள்ள அனுமதி கிடையாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.