இளைஞர்கள் இருவர் மீது வெறியாட்டம்; ஒருவரின் இரு கைகளும் வெட்டி எடுப்பு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது.
காலி மாவட்டம், ரத்கம பிரதேசத்தில் இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளனர் எனவும், ஓர் இளைஞரின் இரு கைகளும் வெட்டப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐந்து அல்லது ஆறு பேர் இணைந்து குறித்த இளைஞர்கள் இருவர் மீதும் வீதியில் வைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் கைகள் வெட்டப்பட்ட இளைஞர் உட்பட மற்றைய இளைஞரும் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைகள் வெட்டப்பட்ட இளைஞரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.