ஆப்கன் வான்வெளி எல்லை மூடல்: இந்தியா வரும் விமானங்களுக்கு சிக்கல்
ஆப்கானிஸ்தான் வான்வெளி எல்லை மூடப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கு வரும் விமானங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கன் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
மேலும், விமானங்கள் அனைத்திலும் முந்தியடித்து கொண்டு ஏறுவதால் நிலைமை கையை மீறியுள்ளது. இதையடுத்து, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு, வான்வெளி எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிகாகோவிலிருந்து ஆப்கானிஸ்தான் வான்வெளி எல்லை வழியாக தில்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் விமானம் வளைகுடா வான்வெளி எல்லைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.