கம்பஹாவில் அதிகரிக்கும் தொற்றாளர்; 24 மணிநேரத்தில் 1,825 பேர் அடையாளம் – 383 பேருக்கு ஒட்சிசனின் உதவியுடன் சிகிச்சை.
கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,825 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார சேவைகள் காரியாலயம் இன்று அறிவித்துள்ளது.
பியகம பொதுச் சுகாதாரப் பிரிவிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த சுகாதார பிரிவில் 222 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்மைவாக மஹர சுகாதார பிரிவில் 215 தொற்றாளர்களும், ஜா – எல சுகாதாரப் பிரிவில் 201 தொற்றாளர்களும் வத்தளை சுகாதாரப் பிரிவில் 198 தொற்றாளர்களும், கம்பஹா சுகாதாரப் பிரிவில் 187 தொற்றாளர்களும், களனி சுகாதாரப் பிரிவில் 159 தொற்றாளர்களும், மினுவாங்கொடை சுகாதாரப் பிரிவில் 155 தொற்றாளர்களும், சீதுவை சுகாதாரப் பிரிவில் 146 தொற்றாளர்களும், மீரிகம சுகாதாரப் பிரிவில் 109 தொற்றாளர்களும், அத்தனகல சுகாதாரப் பிரிவில் 90 தொற்றாளர்களும், கட்டான சுகாதாரப் பிரிவில் 45 தொற்றாளர்களும், தொம்பே சுகாதாரப் பிரிவில் 44 தொற்றாளர்களும், நீர்கொழும்பு சுகாதாரப் பிரிவில் 22 தொற்றாளர்களும், ராகம சுகாதாரப் பிரிவில் 18 தொற்றாளர்களும், திவுலப்பிட்டி சுகாதாரப் பிரிவில் 14 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி தொற்றாளர்கள் 83 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளானவர்களில் 562 பேர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 383 பேருக்கு ஒட்சிசனின் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.