மக்கள் மாகாண எல்லைகளை எவ்வாறு கடக்கின்றார்கள் என்பதை கண்டுபிடித்த பொலிஸார்
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி பயணிப்பவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களையும் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண எல்லை வரை பஸ்களில் பயணித்து, பின்னர் அங்கிருந்து நடைபாதையாக சென்று, வேறு பஸ்களின் மூலம் சிலர் பயணிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால், பஸ்சின் உரிமையாளர், சாரதி, நடத்துநர் உட்பட சம்பந்தப்பட்டவர்களுடன், பஸ்சையும் பொலிஸ் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.