அம்பாறை மாவட்டத்தில் விவசாயத்திற்காக ரூ.3000 மில்லியன் ஒதுக்கீடு.
இந்த முறை அம்பாறை மாவட்டத்தில் விவசாயத்திற்காக ரூ.3000 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளோம்- விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு.
அம்பாறை மாவட்டத்தின் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விவசாய அமைச்சர் மகிழ்ந்தார்கள் அளுத்கமகே, வனவிலங்கு வளங்களின் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, விவசாய இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்க்ஷ, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக்ராஜபக்க்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.எம்.அதாவுல்லா, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் w.D.J.செனவிரத்ன, கிழக்கு மாகாண செயலாளர் நாயகம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் D.M.L. பண்டார நாயக்க மற்றும் பிரதேச செயலாளர்கள், விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் அரச அதிகாரிகள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது அமைச்சர் 330 000 ஏக்கர் நெல் சாகுபடி செய்வதன் மூலம் தேசிய நெல் உற்பத்திக்கு 22% பங்களிப்பு செய்யும் அம்பாறை மாவட்டத்தில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான சேதன உர உற்பத்தி செயன்முறை பற்றி கேட்டறிந்தார்.
இக்கலந்துரையாடலில் கால்நடை உற்பத்தி செயன்முறை குறித்தும் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் பால்மா உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு கறவை மாடுகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தப்பட்டன.
மேலும் பேசிய அமைச்சர் அம்பாறை மாவட்டத்தில் விவசாயத்துக்காக 3000 மில்லியன் ஒதுக்கப்படும் எனவும் இந்த ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஐந்து உழவர் மையங்கள் முழுமையாக புதுப்பிக்கப்படும் எனவும் எதிர்காலத்தில் ஒரு மனிதனுக்கு அவரது பண்ணையின் மண் சான்றிதழை வழங்குவோம்.எனவும் குறிபிட்டார்.
மேலும் கூறிய அமைச்சர் இயற்கை விவசாயம் நம் நாட்டில் மட்டுமில்லை உலகில் உள்ள 186 நாடுகள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்கின்றன. எனவும் இது குறித்து விவசாயிகள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை இயற்கை விவசாயத்தில் நெல் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை உற்பத்திக்கு பற்றாக்குறை ஏற்படாமல் வழங்கலாம் எனவும் வரும் பெரும் போகத்தில் இயற்கை விவசாயத்துக்கு தேவையான அனைத்து உரங்களையும் விவசாயிகளுக்கு வழங்குவோம்.
அத்துடன் நெல் சாகுபடிக்கு ஒரு ஹெக்டேயருக்கு 500 கிலோகிராம் உயர் தர உரம், 15 லீட்டர் உயிர் திரவ உரங்கள், 18 கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட நைட்ரஜன் திரவம் மற்றும் 35 கிலோகிராம் பொட்டாசியம் ஆகியவற்றை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டார்.