முதியோர் இல்லத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று.
கண்டி − மாஹியாவ பகுதியிலுள்ள முதியோர் இல்லமொன்றில் கொவிட் தொற்றுக்கு இலக்கான மூவர் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.
அதனைத் தொடர்ந்து, முதியோர் இல்லத்திலிருந்த அனைத்து முதியோருக்கும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 47 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த முதியோர் இல்லத்தில் 63 பேர் தங்கியுள்ளதாகவும், ஏனையோருக்கும் கொவிட் தொற்று பரவுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் அதிகாரிகள் அச்சம் வெளியிடுகின்றனர்.
மேலும் ,கொவிட் தொற்றுக்குள்ளான முதியோரில் பெரும்பாலானோருக்கு வேறு நோய்கள் காணப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.