கொரோனாவைக் கட்டுப்படுத்த மூடப்பட்டன திவுலப்பிட்டிய நகர் வர்த்தக நிலையங்கள்!
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுலப்பிட்டிய நகர் இன்று முதல் எதிர்வரும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
நேற்று மாலை எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே நகர் மூடப்பட்டுள்ளது.
நகரிலுள்ள அரச, தனியார் வங்கிகளைத் தவிர ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.