கம்பஹாவில் தீவிரமடையும் கொரோனா; மேலும் 1,208 தொற்றாளர்கள் அடையாளம் மூன்றாம் அலையில் 92,222 பேர் பாதிப்பு
கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,208 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளன் என்று மாவட்ட சுகாதார சேவைகள் காரியாலயம் இன்று தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக குறித்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 222 ஆக உயர்வடைந்துள்ளது.
மஹர சுகாதார பிரிவிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக ஜா – எல சுகாதாரப் பிரிவில் 184 தொற்றாளர்களும், கம்பஹா சுகாதாரப் பிரிவில் 136 தொற்றாளர்களும், மினுவாங்கொடை சுகாதாரப் பிரிவில் 133 தொற்றாளர்களும், பியகம சுகாதாரப் பிரிவில் 123 தொற்றாளர்களும், களனி சுகாதாரப் பிரிவில் 99 தொற்றாளர்களும், திவுலப்பிட்டிய சுகாதாரப் பிரிவில் 96 தொற்றாளர்களும், ராகம சுகாதாரப் பிரிவில் 55 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
தொம்பே சுகாதாரப் பிரிவில் 53 தொற்றாளர்களும், அத்தனகல்ல சுகாதாரப் பிரிவில் 50 தொற்றாளர்களும், சீதுவ சுகாதாரப் பிரிவில் 11 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
மீரிகம சுகாதாரப் பிரிவில் 9 தொற்றாளர்களும், நீர்கொழும்பு சுகாதாரப் பிரிவில் 5 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் ஆடைத்தொழிற்சாலை தொற்றாளர்கள் 61 பேர் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.