பவித்ராவின் , சுகாதார அமைச்சுப் பதவி , பறிபோன விடயத்தை அறிந்திராத மகிந்த ?
சுகாதார அமைச்சிலிருந்து தூக்கிய பவித்ரா வன்னியாராச்சியை, போக்குவரத்து அமைச்சில் நியமிக்கப்பட்டிருந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியாது என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வன்னியாராச்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுகாதார அமைச்சின் நடைமுறை பிரச்சனைகள் குறித்து விசாரித்துள்ளார்.
அவ்வேளையில் இனி நான் சுகாதார அமைச்சர் அல்ல, போக்குவரத்து அமைச்சர் என்று பவித்ரா வன்னியாராச்சி பிரதமரிடம் தெரிவித்த போதே , பவித்ரா வன்னியாராச்சியின் அமைச்சு பதவி மாற்றம் குறித்து பிரதமருக்கும் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.