வார இறுதியில் முழுநேர ஊரடங்கு? ஆராய்ந்து வருகிறது அரச உயர்பீடம்
நாடு முழுவதும் தற்போது தினமும் இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு அரச உயர்பீடம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டில் ‘டெல்டா’ வைரஸ் பரவல் காரணமாக நாளாந்தம் 160 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகிவரும் பின்னணியில் இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வார இறுதி நாட்களிலும் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பிலேயே அரசு ஆராய்ந்து வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.