குறைந்த கால ஆட்சியாளர் எனும் சாதனையோடு மலேசிய பிரதமர் பதவி விலகினார்
மலேசிய பிரதமர் முய்தின் யாசின் குறைந்த கால ஆட்சியாளர் எனும் சாதனையோடு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதாவது, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அவரால் வெல்ல முடியாத நிலையில், 74 வயதான அவர் 18 மாதங்களுக்கும் குறைவாகவே ஆட்சியில் இருக்கிறார்.
அவர் மலேசிய வரலாற்றில் குறைந்த காலம் ஆட்சி செய்தவராக இருப்பார்.
பிரதமர் தனது குறைபாடுகளுக்கு மன்னிப்பு கேட்டார் மற்றும் ‘அதிகார பேராசை’ மீது குற்றம் சாட்டினார்.
மலேசிய மன்னர் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, நாட்டை புதிய பொதுத் தேர்தலுக்கு திட்டம் இடத் தொடங்கியுள்ளார்.
மலேசிய பிரதமர் முய்தின் யாசின் கட்சியின் இடைக்கால தலைவராக தொடருவார், அடுத்த பிரதமர் நியமிக்கப்படும் வரை தற்காலிக தலைவராகவும் இருப்பார்.
இருப்பினும், மலேசியப் பிரதமரின் ராஜினாமா பல ஆசிய நாடுகளின் தலைவர்களை அவர்களின் அதிகாரத்தைக் கண்டு வெட்கப்பட வைக்கும்.
“நாட்டின் வளங்களை திருட நான் ஒருபோதும் எனது அதிகாரத்தை பயன்படுத்த மாட்டேன். நீதித்துறையின் சுதந்திரத்தில் கைவைக்க மாட்டேன். அதேபோல பெடரல் அரசியல் யாப்புக்கு எதிராகவும் செயல்பட மாட்டேன். நான் ஆட்சியில் தொடர்ந்து இருந்தால் அவற்றை செய்ய வேண்டியிருக்கும்” என்றார் அவர்.