இலங்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட நகரங்கள் முடக்கப்பட்டன!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கொழும்பு புறக்கோட்டை கெய்ஸர் வீதி உட்பட மேலும் பல நகரங்கள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை மாவட்டத்தின் சில வர்த்தக நகரங்களும் பதுளை பண்டாரவளை உள்ளிட்ட மலையகப் பிரதேச நகரங்களும் அதில் உள்ளடங்குகின்றன.

அதற்கிணங்க வடக்கில் கொடிகாமம், சாவகச்சேரி உட்பட சில வர்த்தக நகரங்கள், திருகோணமலை, நகரசபை மற்றும் பிரதேச சபை நிர்வாக பிரதேசங்கள், கேகாலை,கெக்கிராவ,தெரணியகல,வாதுவை, மொனராகலை, சிலாபம், அம்பாறை,வென்னப்புவ, ரிகில்லகஸ்கட, திவுலபிடிய, அளவ்வை உள்ளிட்ட பல நகரங்களே மூடப்பட்டுள்ளன.

சில வர்த்தக நகரங்கள் ஒரு வார காலத்திற்கும் மேலும் சில வர்த்தக நகரங்கள் இரண்டு வார காலத்திற்கும் மூடப்பட்டுள்ளதுடன் மற்றும் சில வர்த்தக நகரங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

இதுவரை 16 நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மேலும் 36 நகரங்களில் பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா,பதுளை, எம்பிலிப்பிட்டி, பலாங்கொடை, பண்டாரவளை, தங்காலை, வலப்பனை மாத்தளை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் நகரங்கள் பகுதிகளாக மூடப்பட்டுள்ளன.

இந்நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று எச்சரிக்கை நிலை அதிகரித்து காணப்படுவதால் சுயமாக கடைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன

Leave A Reply

Your email address will not be published.