தாலிபான்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அமைப்பினருக்கும் தொடர்பு? வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக இயங்குவதாக கூறப்படும் 5 அமைப்பினரை பற்றி உளவுத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான் அமைப்பினருக்கு தமிழகத்தில் ஆதரவு தெரிவித்துவரும் நபர்களை தீவிரமாக கண்காணிக்குமாறு மத்திய உளவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தாலிபான்களை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர்களின் சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை திரட்டியுள்ள மத்திய உளவுத்துறை, அதனடிப்படையில் விசாரணை நடத்துமாறு தமிழக உளவு பிரிவினருக்கு உத்தரவிட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு ஏராளமான உள்நாட்டு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டவரும் ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தாலிபான்களுடன் தமிழர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தமிழக உளவுத்துறை பொலிஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தமிழகத்தில் உள்ள 5 வலைதள கணக்குகளை உளவுத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அந்த 5 வலைதள கணக்குகளை தலா ஆயிரத்துக்கும் மேலானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த ஐந்து வலைதளக் கணக்குகளும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை பெருமளவு கொண்டாடி வருகின்றன. ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த 5 வலைதள கணக்குகளையும் தமிழக உளவுத்துறையினர் மத்திய உளவுத்துறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து இது குறித்து விசாரிக்குமாறு தமிழகத்தில் உள்ள உளவுத்துறை படைக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

மேலும், இந்த ஆதரவாளர்கள், தாலிபான்களுக்கு ஏதேனும் வகையில் உதவுகிறார்களா என்பது குறித்தும் விசாரித்து ஆய்வு அறிக்கையை அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் உலகமே உற்று நோக்கும் அளவிற்கு இவ்வளவு பெரிய சம்வங்கள் நடந்து கொண்டிருக்கும்போது தமிழகத்தில் ஆதரவாக இயங்கும் இந்த 5 அமைப்பினரை பற்றி உளவுத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.