இந்திய தூதரக குழுவை , தலிபான்கள் எப்படி நடத்தினர்? உயிர் தப்பியது எப்படி? (வீடியோ)

இந்திய – பாகிஸ்தான் பிளவுகளின் மத்தியில் ஆப்பானிஸ்தானில் இருந்த இந்தியர்களின் தலைவிதி என்னாகும் எனும் நிலையில் பதட்டத்தோடு இருந்த நேரம் அது.

அந்த பதட்டத்தோடு காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் இராஜதந்திர பணியாளர்கள் மற்றும் இந்திய பொதுமக்கள் ஆகியோர்  நேற்று நள்ளிரவில் இராணுவ விமானம் மூலம் மீட்கப்பட்டனர். கார்டியன் நியூஸ் இந்த சந்தர்ப்பத்தில் அது குறித்த  ஒரு சிறப்பு அறிக்கையையும் தந்துள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு.

 

சண்டை இல்லாமல் சரணடைதல்

காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் கையெறி ஏவுகணைகளுடன் தலிபான் போராளிகள் காத்திருக்கின்றனர்.

தலைநகரான காபூலைக் கைப்பற்றும் தலிபான்களின் செய்திகளை உற்று நோக்கிய சுமார் 150 இந்திய இராஜதந்திரிகள் மற்றும் பொதுமக்கள் தூதரக வளாகத்திற்குள் இருந்தனர்.

தலிபான்கள் தலைநகர் காபூலை முந்தைய நாள் சண்டையின்றி கைப்பற்றினர்.

இந்திய-பாகிஸ்தான் பிளவு

தாலிபான்களின் மிகப்பெரிய ஆதரவாளராக பாகிஸ்தான் இருந்தது. பாகிஸ்தான் நீண்ட காலமாக ஆப்கானிஸ்தானை மூலோபாயப் போர்கள் மற்றும் இராஜதந்திரம் என தலிபான்களை  பாவித்து,  இந்தியாவை அச்சுறுத்தி வந்தது.

இதற்கிடையில்,  இந்தியா தீவிரவாத இஸ்லாமியக் குழுவினரை துரத்தியடித்த  பின்  20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு இந்தியா தீவிர ஆதரவாளராக இருந்து வந்தது.

ஆனால் இந்திய தூதரகத்தை சுற்றி நின்ற தலிபான் போராளிகள் பழிவாங்க   அவசரம் காட்டாத நிலை தெரிந்தது. மாறாக அந்த இந்தியர்களை , தலிபான்கள் பத்திரமாக  காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் வரும் வரை ஒரு இராணுவ விமானம் அங்கே நிறுத்தப்பட்டது.

புதுடெல்லி, இந்திய தூதரக குழுவை திரும்பப் பெறுவதன் மூலம், ஆப்கானிஸ்தானில் இராஜதந்திர சேவையிலிருந்து முழுமையாக விலகுவதையே அடையாளப்படுத்துகிறது.

கைகுலுக்கலும்,  லேசான புன்னகையும் ….

இந்தியர்களை அழைத்துச் செல்வதற்காக சுமார் இரண்டு டஜன் தலிபான் வாகனங்கள் தூதரகத்திற்கு சென்றன. அவர்கள் மேலே ஏறிச் சென்றபோது, ​​போராளிகளில் சிலர் அவர்களுடன் கைகுலுக்கி சிரித்தனர்.

ஒருவர் அவர்களை காபூலின் தெருக்களில் பசுமை மண்டலத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கிருந்த பிரதான சாலை விமான நிலையம் வரை நீண்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக நாட்டின் முழு கட்டுப்பாட்டையும் எடுப்பதற்குள், அந்த நாட்டில் உள்ள 200 அல்லது அதற்கு மேற்பட்ட இந்தியர்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இதற்கிடையே, தாலிபான்கள் தூங்குவதற்கு முன்பு தூதரகத்தை பதுங்கு குழியாகப் பயன்படுத்த முடிவு செய்தனர். இந்தியர்கள் இந்த அனுபவத்தை “அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது போன்ற உணர்வை தந்தது ” என விவரித்தனர்.

வானத்தில் நோக்கிய துப்பாக்கி வேட்டுக்கள்

நத்தை வேகத்தில் பயணித்த வாகன அணி ,  காபூல் காபூல் விமான நிலையத்தை அடைய 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. இந்தியர்கள் ஒவ்வொரு நிமிடமும் தங்கள் வாழ்க்கைக்கு என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற பயத்துடன் பயணத்தின் போது கழித்தனர். காபூல் முழுவதும் அசாதாரண எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் போரால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் காணப்பட்டனர். இடைவெளி கிடைத்த  போதெல்லாம் , ​​தீவிரவாதிகள் துப்பாக்கிகளுடன் வாகனங்களில் இருந்து குதித்து, மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் மற்றும் சாலையை விட்டு வெளியேற அச்சுறுத்தினர். ஒரு கட்டத்தில், தலிபான் போராளிகள் கூட்டத்தை பயமுறுத்துவதற்காக பல துப்பாக்கி வேட்டுகளை  வானத்தை நோக்கி சுட்டனர்.

தலிபான்கள் அழைத்துச் சென்ற இந்தியர்களை ,  விமான நிலையத்தில் நின்ற  அமெரிக்க வீரர்கள் பொறுப்பேற்றனர்.  அமெரிக்க வீரர்களால் அழைத்துச் செல்லப்பட்டு இரண்டு மணிநேரம் தங்கிய பின்னர் சி -17 இராணுவ விமானத்தில் ஏற்றினர்.

தாய்நாடு திரும்பிய ஒரு இந்தியர் கூறினார்.

“இந்தியா ஒரு சொர்க்கம்.”

தலிபான்கள் ஒழுக்கமானவர்களா?
மற்றொரு இந்தியர், தனது இரண்டு வயது மகளை கையில் ஏந்திக்கொண்டு, தனது அலுவலகத்திலிருந்து இந்தியா திரும்புவதற்கு எடுத்த மணிநேரங்களை விவரித்தார்.

“விமானத்தில் ஏறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தலிபான்கள் எனது வேலை செய்யும் இடத்திற்கு வந்தனர்” என்று அவர் தனது பெயரை வெளியிட தயங்கியவாறு சொன்னவர் , அவர்கள் நடந்து கொண்ட விதத்தை இப்படி விபரித்தார்.

“அவர்கள் கண்ணியமாக நடந்து கொண்டனர், ஆனால் திரும்பி வரும் வழியில் எங்களிடம் இருந்த இரண்டு வாகனங்களை எடுத்துச் சென்றனர். அந்த தருணத்தில் நான் அல்லது என் குடும்பம் அந்த நாட்டில் இருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்தேன்.”

-அமலி 

தமிழில் : ஜீவன்


இந்த வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம்

Leave A Reply

Your email address will not be published.