கொரோனா தொற்றினால் வைத்தியர் உயிரிழப்பு!

நேரியகுளம் மாங்குளம் கிராமத்தின் இளம்வைத்தியர் R.M.ஐனன்”றாகம”
வைத்தியசாலையில் மரணமானார்
ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த வைத்தியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த 34 வயதுடைய மொஹமட் ஜனன் என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைத்தியர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் இரு வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 27 வைத்தியர்கள், 105 செவிலியர்கள் உள்ளடங்களாக 265 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.