கொரோனாவை அழிக்கும் வேலையை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு , ஜனாதிபதி , தோல்வியை ஏற்றுள்ளார் : மனோ (வீடியோ)
கோவிட் 19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் உடனடியாக தலையிடுமாறும் , பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, குழுவை கூட்ட பிரதமர் வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று (ஜன. 18) வலியுறுத்தினார்.
கோவிட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சரியான ஆதரவை வழங்கவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டுகளை கூறக் கூடாது.
அப்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் இந்த மசோதா 2005 ல், நிறைவேற்றப்பட்டதால், இந்த விஷயத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தலையிட வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
பேரிடர் காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான பொறிமுறை இருந்தபோதிலும், மேலும் மனித உயிர்களை இழக்க அனுமதிப்பதன் மூலம் குற்றங்கள் செய்யக்கூடாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆபத்தை அறிந்து மக்கள் தானாக முன்வந்து கடைகளை மூடும்போது எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று அரசு பிரசாரம் செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மனோ கணேசன் மேலும் கூறுகையில், கொரோனாவை அழிக்கும் பணியை கடவுளிடம் ஒப்படைத்ததன் மூலம் , ஜனாதிபதி அவரது தோல்வியை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார் என்றார்.