தலிபான்களின் முதல் செய்தியாளர் சந்திப்பில் தலிபான்கள் பேசியது என்ன? (வீடியோ)
தலிபான்களின் முதல் செய்தியாளர் சந்திப்பில் ஏகப்பட்ட மாறுதலான கருத்துகளை பகிர்கிறார்கள்.
தனியார் ஊடகங்கள், மருந்துகள், பெண்கள், சுதந்திரம் மற்றும் பயங்கரவாதம் பற்றிய தங்களது கொள்கை விளக்கம்
தங்களை எதிர்த்த யாரையும் தாங்கள் பழிவாங்கப் போவதில்லை எனும் ஒப்புதல்
இவை குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சுபிஹுல்லா முஜாஹித் பேசினார்.
காபூலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார்….
அவர் அனைத்து ஆப்கானியர்களையும் “மன்னிப்பார்” என்று கூறியுள்ளார்.
தலைநகர் காபூலில் இருந்து தப்பியோடும் ஆப்கானியர்கள் தங்கள் தாயகத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தலிபான்கள் , ஆப்கானிஸ்தான் ஊடக மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர். தலிபான்கள் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பு இது.
தலிபான் செய்தித் தொடர்பாளர் , வெளிநாடுகளிலோ அல்லது உள்நாட்டிலோ எதிரிகளை தாங்கள் உருவாக்க விரும்பவில்லை என்றார்.
புதிய தலிபான் ஆட்சி ஆப்கானிஸ்தானின் சுதந்திரத்திற்கான வெற்றி என்று அவர் விவரித்தார். அதற்காக வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தலிபானிலுள்ள தனியார் ஊடகங்கள் சுதந்திரமாக வேலை செய்வதை “அனுமதிக்கும்” என்று கூறியதோடு, “அவர்கள் தேசிய மதிப்புகளுக்கு எதிராக வேலை செய்யாவிட்டால்” அவர்களுக்கு அனுமதியளிப்போம் என்று கூறினார்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட சுதந்திரம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
சர்வதேச சமூகத்தை இலக்காகக் கொண்ட பல அறிக்கைகளும் இருந்தன.
ஆப்கானிஸ்தானிலிருந்து நடக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தை நிறுத்துவதாகவும்,
ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத்தின் தளமாகவோ அல்லது தலைமையகமாவோ எவரும் பயன்படுத்துவதைத் தடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.
புகைப்படம்: ரஹ்மத் குல் / ஏ.பி.