நாடாளுமன்றத்தின் சமையலறையையும் சிற்றுண்டிச்சாலைகளையும் முடக்கிய கொரோனா!
கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்றத்தின் சமையலறை மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் என்பன மூடப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனால் நாடாளுமன்றில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் தற்காலிகமாக உணவுகளை வெளியில் இருந்து கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், உணவுப் பொதிகள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் எடுத்து செல்லப்படுவதற்கு முன்னர் பாதுகாப்புக் காரணிகளுக்காக அதனைச் சோதனைக்குட்படுத்த பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அதிகாரிகள், பணிக்குழாமினர் உள்ளிட்ட 275 பேருக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 12 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.