கொரோனா அறிகுறியா? துரித அம்பியூலன்ஸ் சேவை! அறிமுகம் செய்யப்பட்ட புதிய வசதி
கொரோனா தொற்றாளர்களின் நோய் நிலைமைக்கு அமைய, சிகிச்சை நிலையங்களில் அனுமதித்தல் அல்லது வீடுகளுக்குள் தங்க வைத்து சிகிச்சை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்திற்குள் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
01. தொலைபேசி இலக்கம் மற்றும் குறுந்தகவல் நடைமுறைக்கு அமைய, புதிய திட்டத்தை செயற்படுத்துதல்.
02.கீழ் காணும் தகவல்களமளை 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் மூலம் அனுப்புதல்.
அ.நோய் நிலைமை
I. சுவாசிக்க சிரமப்படும் நோயாளர்கள் – A
II. காய்ச்சலில் சிரமப்படும் நோயாளர்கள் – B
III. எந்தவொரு நோய் அறிகுறிகளும் இல்லாத நோயாளர்கள் − c
ஆ. வயது (Space)
இ. தேசிய அடையாள அட்டை இலக்கம் (Space)
ஈ. விலாசம்(Space)
A (Space)வயது (Space) தே.அ.அ. (Space) விலாசம்(Space)
03. குறுந்தகவல் (SMS) மூலம் கிடைக்கும் தகவல்களை கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம், உரிய சிகிச்சை நிலையத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கும்.
04. நோயாளர்களினால் வழங்கப்படும் தகவல்களுக்கு அமைய, அவற்றின் தன்மைக்கு ஏற்ப பிரித்து, 24 மணித்தியாலங்களும் அவர்களுடன் தொடர்புகளை பேணி, நோய் நிலைமையை அறிந்து, அவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் (இதற்காக அம்பியூலன்ஸ் சேவைகள் மற்றும் ஏனைய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்)
05.வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில், தொடர்ச்சியாக அவதானத்துடன் இருந்து, அவர்களுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படும். (இதற்காக 1390 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சேவைகள் வழங்கப்படும்)