நாட்டை முடக்க வேண்டி மகாநாயக்க தேரர்களர்கள் எழுதிய கடிதம்……
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருவதால் நாட்டை ஒருவார காலத்துக்காவது முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
அந்தப் பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இன்று இது தொடர்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றால் முழு நாட்டு மக்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதால் அவர்களைப் பாதுகாப்பதற்காக விசேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமைய குறைந்தது ஒரு வாரத்துக்காவது நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி, பிரதமரை அந்தக் கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.