கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஊழியர் கொரோனாவால் மரணம்

கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஊழியர்களின் முதல் கோவிட் மரணம் பதிவாகியுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் வார்டு எழுத்தாளராகப் பணியாற்றி வந்த மத்துகமவைச் சேர்ந்த 53 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அவர் இன்று (19) காலை முல்லேரியா மருத்துவமனையில் மரணித்தார்.