ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அவர்கள் இன்று இரவு, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை  ஆற்றவுள்ளார்.
 
ஜனாதிபதி இன்று (20) முதலாவதாக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு,   மல்வத்த மற்றும் அஸ்கிரிய தலைமை பீடாதிபதிகளை நேரில் சந்தித்து நாட்டு நிலை குறித்து பேச உள்ளார் என தெரிய வருகிறது.
 
அதன் பின் நாட்டின் கொவிட் தொற்றுநோய் நிலைமை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டை மூடுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விளக்கவுள்ளார்.
அரசாங்கத்துடன் தொடர்புடைய 10 கட்சிகள்   குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை மூடுமாறு நேற்று ,  ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்கள், 

மல்வத்த மற்றும் அஸ்கிரிய தலைமை பீடாதிபதிகளும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி , குறைந்தது ஒரு வாரத்திற்கு நாட்டை மூடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அதேவேளை அரசு சாராத எதிர்க்கட்சிளும் , தொழிற் சங்கங்களும் நாட்டை மூடாவிடில் , முடக்கப் போவதாக தெரிவித்து பரப்புரையொன்றை செய்து வருகிறார்கள்.

கொரோனா தொற்றினால்  ஆயிரக் கணக்கானோர் நோய்வாய்ப்பட்டும் ,  தினசரி நூற்றுக் கணக்கான மக்கள் மடிந்தும் வரும் நிலையில் , ஜனாதிபதி  நாட்டு மக்களுக்கு ஆற்றப் போகும் உரையை பலர் ஆவலோடு எதிர்பாத்து உள்ளனர்.

எல்லோர் வேண்டுகோளுக்கும் செவிமடுத்து ஜனாதிபதி, சில வாரங்களுக்காவது நாட்டை  முடக்குவாரா? இல்லை! தொடர்ந்தும் , தற்போது இருப்பது போல நடத்தப் போகிறாரா என்பது இன்று இரவு உரையின் பின் தெரிய வரும்.

Leave A Reply

Your email address will not be published.