வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களே, கிராமப்புற மருத்துவமனைகளுக்கு உதவுங்கள் : சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், இலங்கை மிக ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, முடிந்தவரை கிராமப்புற மருத்துவமனைகளுக்கு உதவுமாறு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஆதரவளித்து உதவிய அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
டெல்டா கொரோனா வைரஸ் பரவுவதால், இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.