அசேல குணவர்தன சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளாரா?

சுகாதார அமைச்சின் பல உயர் அதிகாரிகளை மாற்றியமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கோவிட் ஒடுக்குதலில் உயர் அதிகாரிகள் தீவிரமாக பங்கேற்காததே இதற்குக் காரணம் என்று அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
குறிப்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மறுசீரமைப்பை துரிதப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கோவிட் பணிக்குழு கூட்டங்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இது குறித்து விளக்கமளித்துள்ளதாக தெரிகிறது.
அசேல குணவர்தன, ஒரு ஊடக சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வியொன்றின் போது , இதற்கு என்னால் பதிலழிக்க முடியாமல் உள்ளது. நான் பதிலழித்தால் அடுத்த சந்திப்பில் பேச கிடைக்குமோ என்பது சந்தேகமே என்றார்.
டாக்டர் அசேல குணவர்தன வகித்த பதவிக்கு,டாக்டர் அமல் ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது.