சுவிஸிலும் , கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்
கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் குறித்து , சுவிஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில் கொரோனா நிலைமை மீண்டும் , மிகக் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இப்படியே கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றால், இரண்டாம் அலையின்போது இருந்தது போன்ற மோசமான நிலையொன்றுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள்.
ஜூன் இறுதியிலிருந்தே நாளொன்றிற்கு கொரோனா தொற்றிற்கு ஆளாவோரின் எண்ணிக்கை 3,000 வரை அதிகரித்தவண்ணம் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் டெல்டா வைரஸ், குறிப்பாக அது 10 முதல் 29 வயதுவரையுள்ள இளம்வயதினரைக் குறிவைப்பதுதான்.
நாளொன்றிற்கு மருத்துவமனையில் கொரோனாவால் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 முதல் 3 வரை இருந்த நிலையில், ஜூலையில் அது பத்து மடங்காகி 30 ஆக உயர்ந்தது. கடந்த செவ்வாயன்று அந்த எண்ணிக்கை 500ஆக அதிகரித்து உள்ளது என தெரியவந்துள்ளது. சுவிஸ் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் உள்ள 70 சதவிகித படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பிவிட்டன. அவர்களில் 14 சதவிகிதம் கொரோனா நோயாளிகளாவார்கள்.
இப்படியே போனால், இரண்டாம் அலையின்போது இருந்தது போன்ற அதே மோசமான நிலை மீண்டும் ஏற்படலாம் என எச்சரிக்கிறார் சுவிட்சர்லாந்தின் கொரோனாவை எதிர்கொள்ளும் அறிவியல் குழுவின் புதிய தலைவரான Tanja Stadler.