யாழில் மேலும் இருவர் கொரோனாவால் மரணம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மீசாலை வடக்கைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும், கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 194ஆக உயர்வடைந்துள்ளது.