இலங்கை அணி எதிர்வரும் அக்டோபரில் ஓமனில் சுற்றுப்பயணம்.
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை சுற்று 1 போட்டிகளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்வதற்கு முன்பு இலங்கை அணி எதிர்வரும் அக்டோபரில் ஓமனில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஓமான் சுற்றுலாவை முடித்துவிட்டு அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுடன் ICC உலக கிண்ணத்தின் சூப்பர் 12 போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்வதற்கு முன்பு இலங்கை ஓமனில் இரண்டு நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடும் என்று இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா கூறினார்.
ஓமானின் வானிலை மற்றும் விளையாட்டு நிலைமைகள் ஐக்கிய அரபு அமீரகத்தைப் போன்றது, உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கு இலங்கை அணிக்கு அது சிறந்த தளத்தை வழங்கும் என நம்ப்பப்படுகிறது.
டைம்ஸ் ஆஃப் ஓமானின் தகவல் படி, இரண்டு டி20 போட்டிகளும் அக்டோபர் 7 மற்றும் 9 ஆம் தேதிகளில் அமரேட்டில் உள்ள ஓசி மைதானத்தில் நடைபெறும்.
“உலக கோப்பை சுற்றுப்பயணத்தின் போது ஓமானுக்கு எதிராக இலங்கை இரண்டு டி 20 போட்டிகளில் விளையாடும், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் வழியில் ஓமானுக்கு வர முடிவு செய்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று ஓமன் பயிற்சியாளர் துலீப் மெண்டிஸ் கூறினார்.
உலக கோப்பைக்கு முன்னர் இடம்பெறும் தகுதிச்சுற்று போட்டிகளில் A குழுவில் இலஙலகை ,அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகியனவும் ஓமான், பங்களாதேஷ், ஸ்காட்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா ஆகியன B குழுவில் இடம்பெற்றுள்ளன.