ஊரடங்கு காலத்தில், தடுப்பூசி செலுத்திக் கொள்வது எவ்வாறு?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில், கொவிட் தடுப்பூசி திட்டம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
ஊரடங்கு காலப் பகுதியில் தடுப்பூசி வழங்குகின்றமை குறித்து கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொவிட் தடுப்பூசியில் இரண்டாவது மருந்தளவை (DOSE) செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள், அந்தந்த தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி கூறுகின்றார்.