குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 2,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு!

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எந்தவிதமான கொடுப்பனவுகளும் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களுக்கு இந்த
2000 ரூபா கொடுப்பனவை அரசாங்கம் வழங்க உள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக நாடு எதிர்வரும் 30ம் திகதி வரையில் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கொடுப்பனவு பற்றி நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் முடக்க நிலை அறிவிக்கப்பட்ட போது அரசாங்கம் ஐயாயிரம் ரூபா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.