சைகோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை கழகம் இளைஞர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு அவசர அனுமதி
சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை தொடர்ந்து பாதித்துவருகிறது. கொரோனா பாதிப்பை தடுத்து நிறுத்த உலக நாடுகள் அனைத்து தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன. இந்தியாவிலும் இந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இதில், கோவேக்சின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும்.
கோவிஷீல்டு இங்கிலாந்திலும், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ரஷ்யாவிலும் தயாரிக்கப்பட்டவை. இந்தநிலையில், இந்தியாவின் சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்த சைகோவ்-டி கொரோனா தடுப்பூசி இந்திய மருந்துகள் ஒழுங்குமுறைக் கழகம் அனுமதியளித்துள்ளார். இளைஞர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி மூன்று டோஸ்கள் செலுத்தப்படும். ஆண்டுக்கு 100 மில்லியன் முதல் 120 மில்லியன் டோஸ்கள் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.