நீர்கொழும்பில் மூவின மக்களும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்.

நீர்கொழும்பில் வாழும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு எதிராகவும், அதற்கு நீதி கோரியும் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கத்தோலிக்க திருச்சபை அனுப்பிய கடிதத்துக்குத் தெளிவாகப் பதிலளிக்க வேண்டும் எனவும், தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் போராட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
‘ஜனாதிபதியே! திமிர் வேண்டாம்’ என்று வாசகம் எழுதப்பட்ட பதாதையையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.