லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் 12 குழந்தைகள் மரணம்

கோவிட் காரணமாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் 12 குழந்தைகள் இறந்துள்ளனர் என தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 25 முதல் 30 வரை கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை ஊழியர்களில் பலரரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் பலர் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ளவர்கள் எனவும் தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் கூறினார்.