இலங்கையில் 4 டெல்டா வகைகள்!
டெல்டா வைரஸின் நான்கு பிறழ்வுகள் இந்த நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன என பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்தார் .
இன்று (22) காலை ஒளிபரப்பப்பட்ட இணைய சிறப்பு கலந்துரையாடலில் பேராசிரியர் பேசுகையில், இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் இந்த அனைத்து பிறழ்வுகளை கட்டுப்படுத்த திறம்பட செயலாற்றுவதாக மேலும் கூறினார்.
கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் உள்ள இந்த நேரத்தில் மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
எது என தடுப்பூசியைத் தேர்வு செய்யாமல் , அருகில் உள்ள மையத்தில் கிடைக்கும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.