கிளிநொச்சியில் ஊரடங்கு வேலையில் ஏற்பட்ட கோரவிபத்தில் ஒருவர் பலி.

கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வருகை தந்த கயஸ் ரக வாகனம் ஊரடங்கு வேலையில் வாகனப் போக்குவரத்தில் குறைந்த காரணத்தினால் அதிவேகத்தில் வீதியால் சென்ற துவிச்சக்கரவண்டியை பாதுகாக்கும் நோக்கில் வேகத்தை குறைப்பதற்காக பிரேக் பிடித்தபோது கிளிநொச்சியில் பெய்கின்ற மழை காரணமாக கயஸ் ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை திரும்பியபோது இரணைமடு சந்தியில் இருந்து வருகை தந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.