தனிமைப்படுத்தல் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு ரூபா:2000 இன்று முதல்.
தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் ஜசரட்ன தெரிவித்தார்.
அதன்படி இதுவரை, இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
மேலும் ,தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.