வங்கிகள் வரையறுக்கப்பட்ட சேவைகளுக்காக இன்று திறந்திருக்கும்.
வங்கி நிறுவனங்கள் இன்று (23) வரையறுக்கப்பட்ட நிதிப் பரிவர்த்தனைகளுக்காக தங்கள் கிளைகளைத் திறப்பதாக அறிவித்துள்ளன.
அதன்படி, பல வணிக வங்கிகள் இன்று தங்கள் கிளைகளை எவ்வாறு திறப்பது என்பது குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தமது சமூக ஊடக பக்கங்கள் மூலம் தெரிவித்துள்ளன.
சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, ஊரடங்கு உத்தரவின் போது வங்கிகள் திறந்திருக்கும்.
அத்தியாவசிய வங்கிச் சேவைகளான வர்த்தக நிதி, திறைசேரி செயற்பாடுகள், அனுமதி மற்றும் சம்பளத்தை செலுத்துதல் போன்றவற்றுக்கு மட்டுமே வங்கிக் கிளைகள் திறந்திருக்கும்.
,இதேவேளை பல வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை முடிந்தவரை ‘டிஜிட்டல் வங்கி’ சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றன.