24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது
சென்னை ஓமந்தூரார் மருத்து கல்லூரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் மற்றும் இன்போசிஸ் நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்சசியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவங்கி வைத்தார்.
கோவாக்சின் இரண்டாம் கட்ட தடுப்பூசி பலருக்கும் கிடைக்காத நிலை உள்ளதாக தெரிவித்த அமைச்சர் விரைவில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். அரசு மருத்துவமனைகள் மட்டும் இல்லாமல், அரசின் வற்புறுத்தலால் தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்ஜிசன் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக 36 மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் 55 மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்பட்டும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளியூர்களிலிருந்து வருபவர்கள், சென்னையில் இருந்து செல்பவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எந்த நேரத்திலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வசதியாக இருக்கும்.
கொரோணா 3 ஆம் அலை வந்தால் குழந்தைகளை பாதிக்கக்கூடும் என்பதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை மையத்துடன் கூடுலாக 15 படுகைகளுடன் அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு கார்ட்டூன் வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்
தமிழகத்தில் காலிப்பணியிடங்களை காட்டிலும் 30 ஆயிரம் கூடுதல் பணியிடங்கள் இருக்கிறது. அதில் ஒப்பந்த முறையில் பணியில் இருப்பவர்களை முறைப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த அவர் அதன் பிறகே காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.